சுகாதாரத்துறை செயலாளருக்கு அதிமுக எம்பிக்கள் கண்டனம்

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 12:57 pm
the-aiadmk-condemns-the-health-secretary

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கத்தினரை டிடிவி. தினகரன் தான் தூண்டி விடுவதாக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

தலைமை செயலகத்தில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில்," சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், யார் சொல்லி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை அமெரிக்கா அழைத்து செல்ல வேண்டாம் என முடிவெடுத்தார் என்பதற்கான பதிலை கூறவேண்டும். 

ஐஏஎஸ் அதிகாரிகள், அரசு நிர்வாகத்தில் இதயம் போன்றவர்கள் ஆனால் அந்த இதயத்தில் சிறு கோளாறு ஏற்பட்டால் அதனை சரிசெய்ய வேண்டியது அரசின் பணியாகும். ஐஏஎஸ் அதிகாரிகள் நிறைவேற்றியுள்ள தீர்மானம் கண்டிக்கதக்கது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டது முதல், இறந்தது வரையிலான நிகழ்வுகளை, சுகாதாரத்துறை செயலாளர் மக்களிடம் தாமாக முன் வந்து தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கத்தினரை, தற்போதைய ஆளும் அரசுக்கு எதிராக, டிடிவி. தினகரன் தூண்டி விடுவதாகவும், அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

newstm.in

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close