பிரதமர் மோடியை அடுத்து அமித் ஷாவும் தமிழகம் வருகிறார்: தமிழிசை தகவல்!

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 12:53 pm
modi-amit-sha-visits-tamilnadu-tamilisai-soundararajan

ஜன.27இல் பிரதமர் மோடி தமிழகம் வருவதையடுத்து, அதற்கு முன்னதாக ஜன.21ல் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா தமிழகம் வரவிருப்பதாக தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தகவல் தெரிவித்துள்ளார். 

மதுரை தோப்பூரில் அமையவிருக்கிற எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவிற்காக ஜனவரி 27ல் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். பிரதமர் வருவதை முன்னிட்டு, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சமீபத்தில் முதல்வரை சந்தித்து பேசினார் தமிழிசை. 

இதைதொடர்ந்து  பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, வருகிற ஜனவரி 21ம் தேதி தமிழகம் வரவிருப்பதாக தமிழிசை தகவல் வெளியிட்டுள்ளார். 

தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், அடுத்து 2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான பணிகள் குறித்து ஆலோசனை நடத்தவே அமித் ஷா வருவதாக கூறப்படுகிறது. 

முன்னதாக தமிழிசை, 'நாங்கள் இடைத்தேர்தலை விட நாடாளுமன்றத் தேர்தலில் தான் அதிக கவனம் செலுத்துவோம்'  என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close