ஸம்ஸ்க்ருதம் கற்றவர்களுக்கு பிற மொழிகளை கற்பது எளிது: தினேஷ் காமத்

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 01:23 pm
who-know-a-language-samskrit-then-its-easy-to-learn-other-languages

ஸம்ஸ்க்ருதத்தை கற்றவர்கள், ஆங்கிலம், ஜெர்மன் உள்ளிட்ட அயல்மொழிகளை எளிதில் கற்கலாம் என்று ஸம்ஸ்க்ருத பாரதி அமைப்பின் அகில பாரத அமைப்புச் செயலர் தினேஷ் காமத், திருச்சியில் நடைபெற்ற அந்த அமைப்பின் இரண்டு நாள் கருத்தரங்கின் இறுதி நிகழ்ச்சியாக நடைபெற்று நிறைவுரையில் கருத்து தெரிவித்துள்ளார்.

காஷ்மீர்  முதல் கன்னியாகுமரி வரை, குஜராத் முதல் அருணாசல பிரதேசம் வரை நாட்டின் பல்வேறு இடங்களில் ஸம்ஸ்கிருத பாரதி அமைப்பின் அலுவலகங்கள் உள்ளன. நாடு முழுவதும் மொத்தம் 545 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, அரசின் நிதியுதவி இல்லாமலேயே மக்களுக்கு சேவையாற்றி வருகிறது.

இன்றைய தலைமுறையைச் சார்ந்த பெற்றோர் தங்களது பிள்ளைகளின் வேலைவாய்ப்பை கருத்தில்கொண்டு, ஆங்கிலம், ஜெர்மன் போன்ற அயல்நாட்டு மொழிகளை அவர்கள் கற்க  ஊக்கமளித்து வருகின்றனர்.

உண்மையில் ஆங்கிலம், ஜெர்மன் மொழிகளை விட ஸம்ஸ்க்ருதம் வளமையான மொழியாகும். இந்த மொழியை யார் ஒருவர் தெளிவான உச்சரிப்புடன்  கற்றுக்கொள்கிறார்களோ, அவர்கள் பிற மொழிகளை எளிதில் கற்றுக் கொள்ளலாம்.

இத்தகைய சிறப்புமிக்க விஞ்ஞானப்பூர்வ மொழியான ஸம்ஸ்க்ருதத்தை தங்கள் பிள்ளைகள் கற்றுக்கொள்ள பெற்றோர் ஊக்கப்படுத்த வேண்டும்.

வயது பேதமின்றி சிறுவர் முதல் முதியோர் வரை, தமிழக மக்கள் மத்தியில் ஸம்ஸ்க்ருதம் கற்றுகொள்ளும் ஆர்வம் அதிகரித்து வருவதை இங்கு கூடியுள்ள கூட்டத்தை காணும்போதே நன்கு தெரிய வருகிறது.

ஸம்ஸ்க்ருத வார்த்தைகளை ஒருவர் தெளிவாக உச்சரித்து வந்தால் நாளடைவில் அவரின் ஞாபக சக்தி அபரிமிதமாக அதிகரிக்கிறது என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. வேதங்களின் மொழியான ஸம்ஸ்க்ருதத்தை படிக்க, படிக்க  நமது மூளைத் திறனும் அதிகரிக்கிறது.

வேதாஸ், ஆயுர்வேதம் போன்ற ஸம்ஸ்க்ருத வார்த்தைகள், ஆங்கிலத்திலும் அவ்வாறே உச்சரிக்கப்படுகின்றன.

சீக்கிரம், கல்யாண மண்டபம் போன்ற தமிழ் வார்த்தைகளும் ஸம்ஸ்க்ருதத்திலிருந்து வந்தவைதான். ஸம்ஸ்க்ருதம் நமது தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினார் என்று தினேஷ் காமத், அவர் ஆற்றிய நிகறைவுரையில் கருத்து தெரிவித்துள்ளார்.

newstm.in

 


 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close