வால்பாறையில் 2 இரவுகள் உறை பனி நீடிக்கும் : சென்னை வானிலை

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 01:54 pm
chennai-meteorological-center-weather-report

வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார மலை பகுதிகளில் மேலும், இரண்டு இரவு உறை பனி தொடரும்  என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும். நீலகிரி, கோவை, திண்டுக்கல் மாவட்ட மலை சார்ந்த பகுதிகளில் நேற்று முதல் உறை பனி குறைந்து வருகிறது. ஆனால், வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த இரண்டு இரவுகள் உறை பனி தொடரும். சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 21 டிகிரி செல்சியசும் பதிவாகும். 

கடந்த 24 மணி நேரத்தில்  மழை எங்கும் பதிவாகவில்லை. பாபுக் புயல் அந்தமான் பகுதியை புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,வழுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று கரையை கடந்துள்ளது. தற்போது போர்ட் பிளேயர்க்கு 130 கிலோ மீட்டர் தொலைவில் மண்டலமாக நிலை கொண்டு உள்ளது. இதன் காரணமாக அந்தமான் தீவுகளில் கனமழை பெய்து வருகிறது. இன்று மழை படிப்படியாக குறையும். அந்தமான் தீவுக்கு புயல் அபாயம் விலகியது". என்ற சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close