சரவண பவன், அஞ்சப்பர் உள்ளிட்ட பிரபல ஹோட்டல்களில் வரி ஏய்ப்பு! - உறுதி செய்த வருமானவரித்துறை

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 01:47 pm
tax-evasion-it-takes-action-against-saravana-bhavan-anjappar-grand-sweets-hot-bread

சரவண பவன், அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸ், ஹாட் பிரட் ஆகிய நான்கு நிறுவனங்களிலும் சுமார் ரூ.120 கோடி வருவாய்க்கு வரி செலுத்தவிலை என வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் சென்னையில் பிரபல உணவு நிறுவனங்களான சரவண பவன், அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸ், ஹாட் பிரட் ஹோட்டல்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்களுக்கு சொந்தமான இடங்கள் என மொத்தம் 32 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. 

கடந்த 4 நாட்களாக நடைபெற்ற சோதனையில், வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. மேற்குறிப்பிட்ட நான்கு நிறுவனங்களிலும் 120 கோடி ரூபாய்  வருவாய்க்கு வரி செலுத்தவில்லை எனவும், துபாயில் போலி நிறுவனங்கள் தொடங்கி அதில் முதலீடு செய்ததாகவும் வருமானவரித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close