கடலூர் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: பாதிரியார் உள்ளிட்ட 17 பேருக்கு தண்டனை!

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 02:06 pm
cuddalore-judgement

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் மாணவிகள் இருவரை பாலியல் விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில், குற்றவாளிகள் 17 பேருக்கு கடலூர் மாவட்ட நீதிமன்றம் இன்று தண்டனை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இருவரை கடந்த 2014ம் ஆண்டு பாலியல் விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில், 17 பேரும் குற்றவாளிகள் என கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 21 பேரில் 2 பேர் இறந்துவிட்டனர். 2 பேர் மாயமாகி விட்டனர். மீதியுள்ள 17 பேருக்கு இன்று தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிரியாருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. பாதிரியார் தவிர மற்ற 16 பேருக்கும் இரண்டு ஆயுள்தண்டனை, மூன்று ஆயுள்தண்டனை, 10 ஆண்டு சிறைத்தண்டனை என வழங்கப்பட்டுள்ளது. 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close