பள்ளிகளில் ஸம்ஸ்க்ருத மொழி: ஸம்ஸ்க்ருத பாரதி வலியுறுத்தல் 

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 05:02 pm
sanskrit-should-become-a-optional-subject-in-all-school-in-tn

 கடந்த இரண்டு நாட்களாக திருச்சியில் ஸ்ம்ஸ்க்ருத பாரதி என்ற தேசிய இயக்கத்தின் மாநில மாநாடு நடைபெற்றது. அதில் சமயப்பெரியவர்கள் முதல் மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கல்வியாளர்கள் கலந்து கொண்டு விழாவில் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். மாநாட்டின் நிறைவாக ஸம்ஸ்க்ருத பாரதியன் சார்பில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி

தமிழகத்தில் உள்ள அனைத்து துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் ஸம்ஸ்க்ருத  மொழிப் பாடத்தை  விருப்பப் பாடமாக அறிவிக்க வேண்டும், அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஸம்ஸ்க்ருத மொழித் துறை பிரிவு தொடங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள், திருச்சியில் நடைபெற்ற ஸ்ம்ஸ்க்ருத மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும், ஸம்ஸ்க்ருத மொழியில் உள்ள தார்மீக, கலை மற்றும் ஆன்மீக சாஸ்த்ர விஷயங்களை கற்றுக் கொள்ள வசதியாக ஆசிரியர் நியமனம், பாடபுத்தகங்களை இயற்றுதல் போன்றவற்றுக்கு திருக்கோயில்களுக்கு பக்தர்கள் அளிக்கும் காணிக்கைகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

 நம்முடைய ரிஷிகளும், முனிவர்களும் அறிவியலுக்குச் செய்த மகத்தான சேவைகள் குறித்த விவரங்கள், கண்டுபிடிப்புகள், சித்தாந்தங்கள் குறித்த தகவல்கள் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் உரிய முறையில் சேர்க்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து நூல் நிலையங்களிலும் ஸம்ஸ்க்ருத  மொழியில் இயற்றப்பட்டுள்ள பழைய மற்றும் புதிய நூல்கள் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

 அரசு இசை, கலை மற்றும் பண்பாட்டு துறையின்கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களில் ஸம்ஸ்க்ருத மொழிப்பாடம் கட்டாயமாக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும் ஸம்ஸ்க்ருத மொழிப் பாடம் விருப்பப்பாடமாக அறிவிக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஸம்ஸ்க்ருத மொழித் துறை பிரிவை தொடங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீ்ர்மானங்கள் இரண்டு நாட்கள் நடைபெற்ற ஸ்ம்ஸ்க்ருத பாரதி அமைப்பின் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close