அதிமுக அமைச்சருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை: சென்னை சிறப்பு நீதிமன்றம் அதிரடி!

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 04:14 pm
3-year-jail-for-minister-balakrishna-reddy

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கடந்த 1998ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்ட ஓசூர் அருகே உள்ள பாகலூர் கிராமத்தில் கள்ளச்சாராயம் தயார் செய்து விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தினர். அந்த சமயத்தில், அங்குவந்த அரசு வாகனங்கள், பேருந்துகள், காவல்துறை வாகனங்கள் மீது கல்வீச்சு மற்றும் தீ வைப்பு சம்பவம் நடைபெற்றது. 

இந்த வழக்கு தொடர்பாக தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்ட 108 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. பின்னர் இது எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் வழக்கை விசாரித்த சென்னை சிறப்பு நீதிமன்றம்,  அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 10 ஆயிரமும் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் அமைச்சர் ரெட்டி உடனடியாக சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழக்கிறார். இதனால் ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி 2001 முதல் அதிமுகவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close