கடலூர் சிறுமிகள் பாலியல் வழக்கு & தீர்ப்பின் முழு விபரம்...!

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 04:55 pm
cuddalore-district-child-rape-case-judgement-details

கடந்த 2014ம் ஆண்டு கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த இரண்டு மாணவர்களில் ஒருவர் 7ம் வகுப்பு, மற்றொருவர் 8ம் வகுப்பு படித்து வந்தனர். இருவரும் நெருங்கிய தோழிகள். பள்ளி அருகே உள்ள ஒரு கடையில் தின்பண்டம் வாங்கி சாப்பிடுவது இவர்கள் வழக்கம். அப்படி தான் ஒருநாள் அந்த கடைக்குச் சென்ற போது, கடையின் உரிமையாளர் தனலட்சுமி, தனது கள்ளகாதலுடன் இருப்பதை சிறுமி பார்த்துவிட்டாள். எங்கே.. வெளியே தெரிந்தால் பிரச்னை என்று எண்ணி, குழந்தையை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக ஆனந்தராஜ் மீது குற்றம் சட்டப்பட்டுள்ளது. 

தொடர்ந்து சிறுமியை மிரட்டி, சிறுமியின் தோழியையும் வீட்டுக்கு அழைத்து வர சொல்லியிருக்கிறார்கள். அந்த சிறுமியையும் ஆனந்தராஜ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த கலா என்ற புரோக்கரிடம் 2 சிறுமிகளையும் ஒப்படைத்து கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். திட்டக்குடியைச் சேர்ந்த மதபோதகர் அருள்தாஸ் வீட்டுக்கு 2 மாணவிகளையும் அனுப்பி வைத்துள்ளார் ககலா. அங்கேயும் பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளது. 

இதனையடுத்து விழுப்புரம், சேலம், கடலூர் உள்ளிட்ட பல இடங்களுக்கு 2 மாணவிகளையும் அழைத்து சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள். இறுதியாக இந்த இரண்டு மாணவிகளையும் வடலூரைச் சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவி தமிழரசியிடம் விற்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் தான் சிறுமிகள் தப்பியோடியுள்ளனர். பின்னர்  காவல்துறைக்கு வந்த புகார் அடிப்படையில் சிறுமிகள் மீட்கப்பட்டனர். 

அவர்கள் தெரிவித்த புகார் அடிப்படையில் விசாரணை நடைபெற்று, மொத்தம் 21 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையும் தொடர்ந்து  நடைபெற்று வந்தது. 

பின்னர் கடந்த 2016ம் ஆண்டு இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார் 19 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவி தமிழரசி மட்டும் தலைமறைவாகினர்.

கடலூர் மகளிர் நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்ற விசாரணை இறுதியில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் தான் என நீதிபதி கடந்த சில தினங்களுக்கு முன்பு தீர்ப்பளித்தார். இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 21 பேரில் 2 பேர் இறந்துவிட்டனர். 2 பேர் மாயமாகி விட்டனர். இந்நிலையில் இன்று மதபோதகர் அருள்தாஸ் உள்பட 17 பேருக்கான தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாதிரியார் அருள் தாஸுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கலா,தனலட்சுமி, ஸ்ரீதர், பாத்திமா, மோகன்ராஜ்,மதிவாணன் ஆகியோருக்கு இரண்டு ஆயுள் தண்டனையும், அன்பு என்ற அருள் ராஜுக்கு மூன்று ஆயுள் தண்டனை
ஆனந்தராஜ், பாலசுப்ரமணியன் ஆகியோருக்கு நான்கு ஆயுள் தண்டனை, மீதமுள்ளவர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ரூ. 5 லட்சம் இழப்பீடாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு சார்பில் தேவையான உதவிகள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close