தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என அதிமுக சொல்லவில்லை: அமைச்சர் காமராஜ்

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 04:33 pm
aiadmk-does-not-say-that-the-election-should-be-postponed-minister-kamaraj

தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என நாங்கள் சொல்லவில்லை எனவும், தேர்தலை சந்திக்க அதிமுக அரசு எப்பொழுதும் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். 

தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் காமராஜ், "தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என நாங்கள் சொல்லவில்லை. தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தில் கஜா புயல் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதாலும், பொங்கல் பண்டிகைகள் வருவதாலும் தற்போது தேர்தல் வைப்பது சரியல்ல என அனைத்து கட்சி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தான் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

தேர்தலை சந்திக்க அதிமுக அரசு எப்பொழுதும் தயாராக தான் உள்ளது. மத்திய அமைச்சர் முதல்வர் சந்திப்பு என்பது சாதாரண ஒன்று தான். வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பு" என கூறினார்..

தொடர்ந்து பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், " மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெளிப்படையான விசாரணை தேவை என்ற அடிப்படையிலும, ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் தான் சட்டத்துறை அமைச்சர் பேசினார். சிபிஐ விசாரணை தேவை என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்பே வலியுறுத்தினார்" என குறிப்பிட்டார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close