முதல்வருடன் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சந்திப்பு!

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 05:21 pm
minister-balakrishna-reddy-meets-tn-cm-edappdi-palanisamy

ஓசூர் கலவர வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து, அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி வருகிறார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கடந்த 1998ம் ஆண்டு மக்கள் போராட்டத்தில் இடையே ஏற்பட்ட கலவரம் தொடர்பாக தற்போதைய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி உள்ளிட்ட 108 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

வழக்கு கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த நிலையில், தொடர்ந்து எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.  இந்த வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம், அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது. 

தொடர்ந்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக கூறியதையடுத்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் வழங்கிய சிறைத்தண்டனை நிறுத்தி வைத்துள்ளது. 

இதையடுத்து அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி வருகிறார். சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் வீட்டில் இந்த சந்திப்பானது நடைபெற்று வருகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close