ஆளுனர் நிகழ்த்தியது உரையல்ல, 'கறை' - ஸ்டாலின்

  Newstm Desk   | Last Modified : 07 Jan, 2019 09:53 pm
opposition-leader-stalin-criticises-governor-s-speech

இன்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் நிகழ்த்தியது உரையல்ல கறை, என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

கஜா புயலால் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்றும், 7 பேர் விடுதலை தொடர்பாக அமைச்சரவை தீர்மானம் போடப்பட்டு 116 நாட்கள் ஆகியும் தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்கவில்லை, என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

ஸ்டெர்லைட் ஆலை மூடுவதாக அரசு முடிவு செய்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக அதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆலையை மூடுவது செல்லாது என்றும் அதனைத் திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள நிலையில், அமைச்சரவை கூட்டம் கூட்டி உடனடியாக கொள்கை முடிவு எடுத்தால் மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முடியும் என்றும் ஸ்டாலின் கூறினார்.

மேலும், "2.4 லட்சம் கோடி முதலீட்டாளர்கள் ஈர்ப்பு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டது.. முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட முதலீடே இன்னும் வரவில்லை என்ற நிலையில் இரண்டாவது மாநாடு போடுவதற்கு என்ன காரணம் என்று விளக்க வேண்டும்" என்றும் கூறினார். பல பிரச்சினைகளை முன் வைத்த ஸ்டாலின், "ஆளுனர் உரை விடுகதை போல் உள்ளது. இது உரையல்ல கறை" என்றும் கூறினார். 

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close