அமைச்சர் செங்கோட்டையனுக்கு விளையாட்டுத்துறை!

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 12:12 am
sports-ministry-added-to-minister-sengottaiyan-portfolio

1998 கலவர வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு கூடுதல் பொறுப்பாக விளையாட்டுத் துறை வழங்கப்பட்டுள்ளது. 

1998ம் ஆண்டு ஓசூர் அருகே நடைபெற்ற கலவரங்களில், பேருந்துகள் காவல்துறை வாகனங்கள் உள்ளிட்ட அரசு சொத்துக்கள் மீது கல் வீசி, தீ வைக்கப்பட்ட சம்பவத்தில், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீதான  வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது. இதனால், பாலகிருஷ்ணா ரெட்டியின் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட்டுள்ளது. 

வழக்கின் தீர்ப்பை அவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள நிலையில், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார் பாலகிருஷ்ணா ரெட்டி. அவரது ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்ட நிலையில், விளையாட்டுத் துறை இலாகாவை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கியுள்ளார்.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close