அமைச்சர்களை ஐஏஎஸ் அதிகாரிகள் மிரட்டுவதா? - சி.வி சண்முகம் பாய்ச்சல்

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 04:32 am
minister-cv-shanmugam-fires-back-after-ias-officers-resolution

ஜெயலலிதா மரண விவகாரத்தில் அமைச்சர் சி.வி சண்முகத்தின் கருத்துக்களுக்கு எதிராக ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை தொடர்ந்து, "அமைச்சர்களை ஐஏஎஸ் அதிகாரிகள் மிரட்டுவதா?" என அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சமீபத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் பேசியபோது, "சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனை விசாரிக்க வேண்டிய முறையில் விசாரித்தால், உண்மை வெளியே வரும்" என தெரிவித்தார். அமைச்சரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அமைச்சர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்டுப்படுத்த வேண்டும், என வலியுறுத்தி ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியது.

இதைத் தொடர்ந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கத்துக்கு பதிலடி கொடுத்து பேசியுள்ள அமைச்சர் சி.வி சண்முகம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை ஐஏஎஸ் அதிகாரிகள் மிரட்டும் தொனியில் பேசுவதாக, குற்றம் சாட்டியுள்ளார். அமைச்சர்களுக்கு யாரையும் கேள்வி கேட்கும் உரிமை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close