3 மாதங்களுக்கு முன் கடத்தப்பட்ட சிறுமி ஹரிணி மீட்கப்பட்டார்!

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 11:11 am
police-found-missing-girl-harini

மூன்று மாதங்களுக்கு முன்பு மதுராந்தகம் அருகே கடத்தப்பட்ட சிறுமி ஹரிணி காவல் துறையினரால் சென்னையில் மீட்கப்பட்டுள்ளார். 

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரை அடுத்த மானாம்பதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர், தன் மனைவி காளியம்மாளுடன், ஊர் ஊராகச் சென்று மணி வியாபாரம் செய்கிறார். இவர்களின் பெண் குழந்தை ஹரிணி(2).

பவுஞ்சூர் அடுத்த அணைக்கட்டு காவல் நிலையம் எதிரே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி இரவு தெருவில், வெங்கடேசன் குடும்பத்துடன் படுத்துறங்கியபோது சிறுமி ஹரிணி காணாமல் போனார். இதுகுறித்து அணைக்கட்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த குழந்தையை தேட 10க்கும் மேற்பட்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த குழந்தை சென்னையில் மீட்கப்பட்டது. பின்னர் அக்குழந்தை பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close