மத்திய தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய வேலைநிறுத்தம்

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 11:26 am
the-nation-wide-strike-of-the-central-trade-unions

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மத்திய அரசின் தொழிலாளர்கள் கொள்கைக்கு எதிரான செயல்பாட்டை கண்டித்தும், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் சிஐடியு, ஐஎன்டியுசி, ஹெச்எம்எஸ், எல்பிஎஃப் உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் அகில இந்திய சம்மேளனங்கள் சார்பில் இன்றும், நாளையும் நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

அதன்படி, இன்று நாட்டின் பல்வேறு இடங்களில் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வங்கி ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் வங்கி, ரயில்வே சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில், அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். 

இதேபோல், சேலத்தில் ரயில்வே கூட்செட் சுமை தூக்கும் தொழிலாளர்கள் மற்றும் சேலம் உருக்காலை நிறுவன ஊழியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

இதனிடையே, தமிழகத்தில் இருந்து கர்நாடகா மற்றும் கேரளா செல்லும் பேருந்துகள் தமிழக எல்லையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். 

newstm.in

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close