ஸ்டெர்லைட் விவகாரம்: சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு...

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 01:00 pm
sterlite-issue-dmk-walkout-from-assembly

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து வழங்கியுள்ள தீர்ப்பு குறித்து சட்டப்பேரவையில், அரசுத் தரப்பிலிருந்து எவ்வித விளக்கமும் அளிக்காததை கண்டித்து திமுக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர். 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 2ம் தேதி சபாநாயகர் தனபால் தலைமையில், ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், இட ஒதுக்கீடு தொடர்பான பொதுபட்டியலில் உள்ள பொருளாதார ரீதியில் மிகவும் பிற்பட்டோருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு அளித்துள்ள ஒப்புதல் முற்றிலும் முரணானது எனவும், அரசியல் சட்டத்திற்கும் சமூக நீதிக்கு எதிரானது எனவும் கருத்து தெரிவித்தார்.

மேலும் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்காக முழுமையாக போராடி, அதனை நிலைநாட்டிய பெருமை தமிழ்நாட்டிற்கே உண்டு என்றும், 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார். 

தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது எனக் கேள்வி எழுப்பினார். ஆனால் அதற்கு சட்டப்பேரவையில்  அரசுத் தரப்பிலிருந்து எவ்வித விளக்கமும் அளிக்கப்படாததை அடுத்து திமுக உறுப்பினர்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close