தமிழகத்தின் 33வது மாவட்டமானது கள்ளக்குறிச்சி ...!

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 03:47 pm
kallakurichi-will-be-the-33rd-district-in-tn

தமிழகத்தின் 33வது மாவட்டமாக கள்ளகுறிச்சியை அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

நிர்வாக வசதிக்காகவும், கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாலும், கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார். முன்னதாக கள்ளக்குறிச்சி விழுப்புரம் மாவட்டத்தில் இருந்தது. இதையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு தமிழகத்தின் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உருவாக்கப்பட்டுள்ளது. 

விரைவில் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலையை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரம் உயரவும், விழுப்புரம் பெரிய மாவட்டமாக இருப்பதால் நிர்வாக வசதிக்காக கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிக்கப்பட வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close