வேலூர் மாவட்டத்தையும் மூன்றாக பிரிக்க வேண்டும்: ராமதாஸ்

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 02:48 pm
vellore-district-to-be-split-into-3-districts-ramadoss

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியை பிரித்தது போன்று திண்டிவனத்தையும் தனியாக பிரிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த கள்ளகுறிச்சியை தமிழகத்தின் 33வது தனி மாவட்டமாக அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தலைநகரமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேபோல், திண்டிவனத்தை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தையும் மூன்றாக பிரிக்க வேண்டும்!" என்று பதிவிட்டுள்ளார். 

— Dr S RAMADOSS (@drramadoss) January 8, 2019

திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு வேலூர் மாவட்டத்தையும் பிரிக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் அடுத்த கோரிக்கை எழுந்துள்ளது. 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close