கவரில் ஒட்டினா ஸ்டாம்ப், நாக்குல ஒட்டினா போதை....!

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 02:45 pm
lsd-stamps-sales

சென்னையில் போதை ஸ்டாம்ப் புழக்கம் அதிகரித்து வருவதால், வாடிக்கையாளர்களை பிடித்து அவர்கள் மூலம் குற்றவாளிகளை கண்டுபிடிக்க போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வியூகம் வகுத்துள்ளனர். 

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, போதை பொருட்கள் விற்பனை செய்யப்படலாம் என்ற சந்தேகத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, ராயப்பேட்டையில் போதை பொருள் விற்பனை செய்யும் நபரை பிடித்து அவரை சோதனையிட்டனர். ஆனால் அவரிடம் போதை பொருள் எதுவும் இல்லை. இருப்பினும் அவரது செல்போனை சோதித்தப்போது, அதனுள் 20 ஸ்டாம்ப்கள்  இருந்தன. 

"எல்.எஸ்.டி (LSD) ஸ்டாம்ப்" எனப்படும் இந்த ஸ்டாம்ப், குழந்தைகள் நோட், புத்தகங்களில் ஒட்டும் ஸ்டாம்ப் போன்று இருப்பதால் சாதரணமாக எண்ணிவிட கூடாது. இந்த ஸ்டாம்ப்பில் போதை மருந்து சேர்ந்துள்ளது. இந்த ஸ்டாம்பை, நாக்கில் வைத்ததும் போதை தலைக்கேறும். இத்தகைய ஸ்டாம்ப்கள் வெளிநாடுகளில் அதிகம் புழங்கி வருகிறது. 

இந்நிலையில், சென்னையில் எவ்வாறு இந்த ஸ்டாம்ப்கள் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்து ராயப்பேட்டையில் சிக்கிய போதை பொருள் விற்பனைசெய்யும் நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கோவாவுக்கு சென்று போதை ஸ்டாம்ப்களை ரூ.1000 என வாங்கி வந்து சென்னையில், ரூ.2000க்கு விற்பனை செய்துள்ளதும்,  புத்தாண்டு அன்று ரூ.5000 வரை விலைபோனதும் தெரியவந்துள்ளது.

மேலும், சென்னையில் சில கல்லூரிகளில் போதை ஸ்டாம்ப் புழக்கத்தில் உள்ளதாகவும், சமீபகாலமாக பார்ட்டிகளிலும் இந்த ஸ்டாம் இடம்பெற தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.  இவை வெளிநாடுகளிலிருந்து வரும் புத்தக பார்சல்களில் மறைத்து கடத்தப்படுவதால், அதிகாரிகள் கண்களில் சிக்குவதில்லை.

இதனை தடுக்க போதை பொருட்களை வழக்கமாக வாங்கும் வாடிக்கையாளர்களை பிடித்து அவர்கள் மூலம் கடத்தல், மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை பிடிக்க போதை பொருள் தடுப்பு போலீசார் வியூகம் வகுத்துள்ளனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close