சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு; அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார் சபாநாயகர்!

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 03:40 pm
tn-assembly-adjourned-by-speaker

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து, சபாநாயகர் தனபால் அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரானது கடந்த 2ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தொடங்கிய அன்றே பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்த சிறப்பு அறிவிப்பை கவர்னர் வெளியிட்டார். 

தொடர்ந்து, சட்டப்பேரவையில் மேகதாது அணை பிரச்னை, சாத்தூர் பெண்ணிற்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம், ஸ்டெர்லைட் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

இன்று மிக முக்கிய அறிவிப்பாக கள்ளக்குறிச்சியை விழுப்புரத்தில் இருந்து பிரித்து தனி மாவட்டமாக முதல்வர் பேரவையில் அறிவித்தார். 

இதையடுத்து சட்டப்பேரவை இன்றுடன் நிறைவடைவதையொட்டி, சபாநாயகர் தனபால் அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close