பிளாஸ்டிக் தடைக்கு எதிர்ப்பு: 1000க்கும் மேற்பட்ட வணிகர்கள் கைது.

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 04:02 pm
plastic-bans-more-than-1000-businessmen-arrested

பிளாஸ்டிக் தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிகர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னையில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் சார்பில், பிளாஸ்டிக் தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா சாலையில் இருந்து வாலாஜா சாலை வழியாக சட்டமன்றத்தை முற்றுகையிட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் பேரணியாக சென்றனர். அவர்களை வாலாஜா சாலையில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். 

அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறுகையில், "சிறு, குறு வணிகர்கள் பயன்படுத்தும் 14 வகையான பிளாஸ்டிக்கிற்கு மட்டும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களான பிஸ்கட், குர்குரே போன்ற பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதிக்காமல் நடவடிக்கை எடுத்திருப்பது வணிகர்களை வஞ்சிக்கும் செயலாக உள்ளது. பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றுப் பொருள் தயார் செய்யும் வரை இந்த தடையை விலக்கிக்கொள்ள வேண்டும். இந்த தடை தொடர்ந்து அமலில் இருந்தால் பொங்கலுக்கு முன்பு தமிழகம் தழுவிய கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்" என தெரிவித்தார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close