ஸ்டெர்லைட் விவகாரத்தில் அவசர சட்டம் இயற்றப்பட வேண்டும்: டிடிவி தினகரன்

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 04:01 pm
ttv-dinakaran-opinion-over-sterlite-case-order

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மிகப்பேறிய அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது என அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "உச்ச நீதிமன்றத்தில் தமிழக நலன் சார்ந்த பிரச்னைகளில் தொடர் தோல்வியை தான் சந்தித்து வருகிறோம். முல்லை பெரியாறு, மேகதாது, நீட் என தமிழ்கத்தின் ஜீவாதார பிரச்னைகளில் எடப்பாடி பழனிசாமி அரசு தொடர்ந்து தோல்வியை சந்தித்து தான் வருகிறது. 

ஸ்டெர்லைட் விஷயத்தில் தமிழக அரசு துவக்கத்தில் இருந்தே ஆலையை மூட வேண்டும் என்ற எண்ணமில்லை. இனிமேலாவது தாமதிக்காமல் ஒரு கொள்கை முடிவெடுத்து அவசியப்பட்டால் அவசர சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமமுகவின் முழு அறிக்கை கீழே:

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close