பொங்கலை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதியும் அரசு விடுமுறை!

  Newstm Desk   | Last Modified : 08 Jan, 2019 05:35 pm
jan-14th-announced-as-government-holiday-by-tn-govt

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் 14ம் தேதி போகி அன்றும் அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. 14ம் தேதி விடுமுறையை ஈடு செய்ய, பிப்ரவரி 9ம் தேதி சனிக்கிழமை பணி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு, வரும் 15, 16, 17 நாட்களுக்கு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. வார இறுதியை தொடர்ந்து, திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும், ஊழியர்கள் பணிக்கு செல்ல வேண்டியிருந்தது. இந்த நிலையில், 14ம் தேதி போகி அன்றும், அரசு விடுமுறை அளிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளதால், அரசு ஊழியர்கள், மாணவர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

14ம் தேதி விடுமுறையை ஈடு செய்ய பிப்ரவரி இரண்டாவது சனிகிழமை, 9ம் தேதி பணி நாளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close