தமிழகத்தில் பாரத் பந்த் வெற்றிபெறவில்லை

  ஸ்ரீதர்   | Last Modified : 08 Jan, 2019 07:08 pm
bharat-bandh-fails-in-tamilnadu

தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவ‌டிக்கையால் பாரத் பந்த்  வெற்றிபெறவில்லை. பேருந்துகள், ரயில்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கின.

அரசு ஊழியர்கள் பொது வேலைநிறுத்தம் காரணமாக கேரளா மற்றும் கொல்கத்தாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும், நாளையும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர்.

அதன்படி இன்று நடந்த போராட்டத்தில்  மேற்கு வங்க மாநிலத்தில் இந்திய தொழில் வர்த்தக காங்கிரஸ் கூட்டமைப்பின் சார்பில் கொல்கத்தா மைதான் ரயில் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

கொல்கத்தாவில்  பல்வேறு இடங்களில் அரசு பஸ்கள்  மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.மேலும் அசன் சோல் பகுதியில்  திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், மார்க்சிஸ்ட் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றது. 

மும்பையிலும் அரசு பேருந்துகள் இயங்கவில்லை. கேரளாவில்  தனியார் வாகங்கள் மட்டுமே இயங்குகின்றன. பல்வேறு ரயில் நிலையங்களில் தொழிற்சங்கத்தினர் ரயில் மறியலில் ஈடுபட்டு உள்ளனர். திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் போராட்டக்காரர்கள்  ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ், ரப்தி சாகர் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவ‌டிக்கையால் பாரத் பந்த்  வெற்றிபெறவில்லை. பேருந்துகள், ரயில்கள்,  ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கின.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close