திருப்பாவை-25 “ஒருத்தி மகனாய்ப் பிறந்துஓர் இரவில்...”

  சாரா   | Last Modified : 27 Dec, 2019 09:40 am
thiruppaavai-25

பல பல பிறப்புகளைக் கொண்ட மானிடருக்கு ஒரே தாய் தந்தை. ஆனால்,  பிறப்பும் இறப்பும் இல்லாத நாராயணனுக்கு கிருஷ்ணாவதாரத்தில் தாய் தந்தைகள் இரண்டு. குலம் இரண்டு, வர்ணம் இரண்டு.

(THE GOD, THE SUN போல ஒரேயொரு எனும் அர்த்தத்தில் ஒருத்தி தேவகி, ஒருத்தி யசோதா, ஒரேயொரு இரவு என்று கொள்ள வேண்டும் என்பதற்காக இங்கே ஆங்கிலச் சொல்லை பயன்படுத்தியிருக்கிறோம். வாசகர்கள் அருள்கூர்ந்து பொருத்தருளணும்)

ஒருத்தி மகனாய்ப் பிறந்து: 
THE தேவகி மகனாய்ப் பிறந்து தாமோதரனால் தாயின் குடல் விளக்கம் செய்த பெருமை பெற்றவள் இல்லையா? 

ஒருத்தி மகனாய் வளர்ந்து:  
THE யசோதை, அப்பேர்பட்ட பாக்கியவதி தேவகிக்கே, கண்ணனுக்கு அமுதூட்டும் பாக்கியம் கிடைக்காததை 'தான்'  பெற்றவளில்லையா யசோதா? மாரிலும் மடியிலும் தூக்கிக் கொஞ்சும் பாக்கியம் வேறு யாருக்குக் கிடைத்தது?

 ஓரிரவில் THE இரவு: 
அந்த இரவு பெரும் குருஷேத்திரப் போர், பகவத் கீதை, விஷ்ணு சகஸ்ரநாமம், கம்ச வதம், துகிலுரிப்பு, விதுரநீதி, யதுகுல முடிவு போன்ற எல்லாவற்றிற்கும் காரணமான இரவு அல்லவா? 

இத்தனை THE-களுக்குக் காரணமான, THE கிருஷ்ணனை எப்படியாவது கொன்று தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, பல அசுரர்களை அனுப்பி வைத்தான் கம்சன். அத்தனை அசுரர்களையும் அழித்துக் கொண்டே இருந்த  கண்ணனின் நினைவு கம்சனின் வயிற்றிற்குள் பயமெனும் நெருப்பாக எரிந்து கொண்டே இருக்கும் படி செய்த நெடுமாலே! 

உன்னை நாடி யாசித்து நிற்கிறோம். எங்களுக்கு முக்தி கொடுத்து உம் திருவடியில் சேர்த்துக் கொண்டீராயின், இலக்கை அடைந்து விட்டபடியால் நின்னை மறந்து விடாமல், அங்கேயும் உன்னையும் செல்வத்தின் சிகரமான மகாலெக்ஷ்மி தாயாரையும் புகழ்ந்து பாடியே மகிழ்ந்து இருப்போம். 

“ஒருத்தி மகனாய்ப் பிறந்துஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.”

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close