பிரதமர் ரூ.15 லட்சம் வழங்கியிருந்தால் இடஒதுக்கீடுக்கு அவசியமே இல்லை: தம்பிதுரை ஆவேசம்

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 08:18 am
reservation-bill-will-be-struck-down-by-supreme-court-m-thambidurai

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடுக்கு வகை செய்யும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டதற்று அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை கடந்த 7ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதற்கான மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட் நேற்று அறிமுகம் செய்தார்.

மசோதா மீதான விவாதத்தில் பேசிய  அதிமுக எம்.பி. தம்பிதுரை, "பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை முன்னேற்ற ஏராளமான திட்டங்கள் உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு மத்திய அரசு இதுவரை என்ன செய்திருக்கிறது. இந்த மசோதாவில் நிறைய குறைகள் இருக்கிறது. 

தோற்கப் போகும் ஒன்றின் மீது மத்திய அரசு வீண் விவாதம் செய்து கொண்டிருக்கிறது.  அது வெற்றி பெறாது. பிரதமர் அறிவித்தபடி, வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் வழங்கினால், இடஒதுக்கீடு எதற்கு" என்று ஆவேசமாக கூறினார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close