பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம்

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 10:23 am
pongal-special-bus-ticket-booking

சென்னை கோயம்பேட்டில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். 

பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை 24,708 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார். அதன்படி, இந்த சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது. சென்னை கோயம்பேட்டில் உள்ள சிறப்பு முன்பதிவு மையத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார். 

பொங்கல் சிறப்பு பேருந்துகள் முன்பதிவிற்காக கோயம்பேட்டில் 26 மையங்களும், தாம்பரம் சானடோரியத்தில் 2 மையங்களும், பூந்தமல்லி மற்றும் மாதவரத்தில் தலா ஒரு மையமும் என மொத்தம் 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், www.tnstc.in www.redbus.in, www.paytm.com www.busindia.com ஆகிய இணையதளங்கள் மூலமும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close