சமூக நீதியில் தமிழகம் தான் முன்னோடி: பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு ஏமாற்று வேலை: தம்பிதுரை

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 01:44 pm
thambidurai-about-10-percent-reservation-bill

பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு ஊழலையும் குழப்பத்தையும் தான் உண்டாக்கும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை கடந்த 7ம் தேதி ஒப்புதல் அளித்தது. இதற்கான மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தவார் சந்த் கெலாட் நேற்று தாக்கல் செய்துள்ளார். 

இந்நிலையில் இன்று கோவை விமான நிலையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நேற்று மக்களவையில் பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது.  நாட்டில் இது மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். 

சமூக நீதிக்காக தான் இட ஒதுக்கீடு மட்டுமே இருக்க வேண்டுமே தவிற, பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு இருக்க கூடாது. இதனால் ஊழலும், குழப்பமும் தான் உண்டாகும். 

தமிழகம் தான்  சமூக நீதியில் முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. இங்கு யாரும் பெயருக்கு பின்னால் சாதிப்பெயரை இணைத்துக்கொள்வதில், ஆனால் தமிழகத்திற்கு  வெளியே, பிரதமர் நரேந்திர மோடி வரை சாதி பெயரை தங்கள் பெயருடன் இணைத்துக்கொண்டு இருக்கின்றனர். 

இந்நிலையில் தாழ்த்தப்பட்டவர் என்று அறியப்படுவர் என்றுமே அந்த பெயரில் தான் அழைக்கப்படுவார். அதை மாற்ற தான் இடஒதுக்கீடு உள்ளது. பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு என்பது ஏமாற்று வேலை. இதற்கு எதிராக தான் அதிமுக இருந்து வருகிறது" என்றார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close