சென்னை தீவுத்திடலில் 45வது பொருட்காட்சி: முதல்வர் தொடங்கி வைத்தார்!

  Newstm Desk   | Last Modified : 09 Jan, 2019 05:26 pm
chennai-exhibition-starts-today

சென்னை தீவுத்திடலில் 45வது சுற்றுலா மற்றும் தொழில் துறை கண்காட்சியை இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். 

தமிழக சுற்றுலாத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான பொருட்காட்சி இன்று தொடங்கி மொத்தம் 70 நாட்கள் நடைபெற இருக்கிறது. பல்வேறு துறைகளின் சார்பில் சாதனைகளை வெளிப்படுத்தும் பொருட்டு அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், குழந்தைகளின் பொழுதுபோக்கிற்காக பல்வேறு விளையாட்டுகள் இடம்பெறுகின்றன. 

இன்று இந்த பொருட்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். முதல்வருடன், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

newstm.in

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close