ஆறுமுகசாமி ஆணையம்: அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை.

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 11:38 am
minister-vijayabaskar-did-not-appear

ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 3வது முறையாக இன்றும் ஆஜராகவில்லை. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியை அரசு நியமித்துள்ளது. இந்த விசாரணை ஆணையத்தில், ஜெயலலிதாவின் தொடர்பில் இருந்தவர்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள் என பலரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகும்படி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் 3வது முறையாக இன்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை. ஏற்கனவே கடந்த 7ம் தேதி மற்றும் டிசம்பர் 18ம் தேதி ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி அழைப்பாணை அனுப்பப்பட்டும், விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை.

newstm.in  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close