அனைவருக்கும் ரூ.1,000 பொங்கல் பரிசு: நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 11:57 am

tamil-nadu-govt-requesting-hc-to-take-back-pongal-price-order

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் பொங்கல் பரிசு என்று கட்டுப்பாடு விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அரசு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது ஆனால் அதனை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

மேலும் இது தொடர்பாக வேண்டுமெனில் உச்சநீதிமன்றத்தை நாடுங்கள் என்றும் நீதிபதி,  அதிமுக தரப்பு வழக்குறைஞருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

முன்னதாக கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டேனியல் என்பவர், உணவு வழங்கள்துறை மூலம் ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும்  பொங்கல் பரிசாக வழங்கப்படும் மானியத்தை நிறுத்த வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜமாணிக்கம், சத்யநாராயணா அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், "அரசு அறிவித்துள்ள ரூ.1000 பொங்கல் பரிசுத் தொகை அனைவருக்கும் ஏன் வழங்கப்படுகிறது? இந்த பணம் மக்கள் வரிப்பணம் தான். கட்சிப்பணம் ஒன்றும் இல்லை. 

நீதிபதியாக  இருக்கும் எனக்கு எதற்கு ரூ.1,000? அதற்கு பதிலாக, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் பொங்கல் பரிசுத்தொகை வழங்கலாம். மீதியுள்ள பணத்தில் மக்களுக்கு நல்ல சாலை வசதி, மருத்துவ உதவி, கல்வி வசதி உள்ளிட்டவை ஏற்படுத்திக்கொடுக்கலாம்" என்று கூறி பொங்கல் பரிசுத் தொகை வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும், அரசின் கொள்கை முடிவுகளில் தவறு இருந்தால் அதில் நீதிமன்றம் தலையிடும் என்று தெரிவித்தனர். 

அதையடுத்து நீதிமன்றத்தின் முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என அதிமுக தரப்பில் சென்னை நீதிமன்றத்தில் இன்று காலை மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதிகள், அவசியமெனில் இதுகுறித்து மனுதாரர் உச்சநீதிமன்றத்தில் முறையிடலாம் எனவும் ஆலோசனை வழங்கி வழக்கை முடித்து வைத்தனர்.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.