இடஒதுக்கீடு மசோதாவை யாரும் ஏற்கமாட்டார்கள்: கனிமொழி!

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 12:18 pm
kanimozhi-press-meet

இடஒதுக்கீடு மசோதா இரு  அவைகளிலும்  தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த திமுக  எம்.பி கனிமொழி, "இப்போது பா.ஜ.கவை பற்றி அனைவரும் புரிந்துக்கொண்டனர்" என்று கூறினார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "முன்பு பா.ஜ.கவை தமிழகம் மட்டும் தான் எதிர்த்துக்கொண்டு இருந்தது. ஆனால் இப்போது அனைத்து மாநிலங்களும் பா.ஜ.கவின் உண்மை முகத்தை தெரிந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

அனைத்து மாநிலத்தவரும் இப்போது தான் தங்களின் தனித்தன்மையை உணரத் தொடங்கி இருக்கிறார்கள். திராவிட இயக்கம் கூறிய கருத்துக்களின் முக்கியத்துவத்தை அவர்கள் இப்போது தான் புரிந்துக் கொள்ள துவங்கி உள்ளனர். எனவே நிச்சயமாக பல மாநிலங்கள் இந்த மசோதாவை ஏற்றுக்கொள்ளாது" என்றார். மேலும் தினகரன் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது யார் யாரை விமர்சிக்கிறார்கள் என்பதற்கு தகுதி வேண்டும் என்று கூறினார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close