அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்க நேரிடும்: நீதிமன்றம் எச்சரிக்கை

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 12:34 pm
chennai-highcourt-madurai-branch-on-jallikattu

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்றால் ஜல்லிக்கட்டு நடத்த தடைவிதிக்க நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்தாண்டு வரும் 15ம் தேதி அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தர வேண்டும் என்று நீதிமன்றத்தில் முன்னதாக மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அங்கு நடைபெறும் ஜல்லிக்கட்டு குறித்து தொடர்ந்து ஒரு பிரிவினர் மட்டுமே முடிவு எடுத்து வருகின்றனர் என்று கூறி இந்த மனுவில் தங்களை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும் என்று சிலர் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், இந்த விஷயத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை என்றால் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்படும் என்று எச்சரித்தனர்.

மேலும் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த விழாக்குழுவை நீதிமன்றமே அமைக்கும் என்று தெரிவித்த நீதிபதிகள் மதுரை ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் எஸ்பி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். 

newstm.in

 

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close