சென்னை நகர் நிர்வாக அலுவலகம்: முதலமைச்சர் திறந்து வைத்தார்

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 01:35 pm
chennai-city-administration-office-opened

சென்னையில், ரூ.73.8 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நகர் நிர்வாக அலுவலக கட்டடத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். 

சென்னை சாந்தோம் சாலை எம்.ஆர்.சி.நகரில், தமிழக அரசு சார்பில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாக அலுவலங்களுக்காக ரூ.73.8 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் உட்பட 11 மாடிகளுடன் கூடிய நகர நிர்வாக அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிர்வாக அலுவலகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள், மாநகராட்சி உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

முதற்கட்டமாக, உள்ளாட்சி துறை சார்ந்த நபர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பணிநியமன ஆணைகளை வழங்கினார். புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் 11 மாநகராட்சி, 124 நகராட்சி, 528 பேரூராட்சிகளின் நிர்வாக அலுவலகங்கள் செயல்படவுள்ளன. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close