தூத்துக்குடி துப்பாக்கி சூடு: நினைவு சின்னம் அமைக்க கோரிக்கை

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 03:45 pm
request-to-set-up-a-monument

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும் என உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். 

சென்னை சேப்பக்கம் பத்திரிக்கையளர் மன்றத்தில், தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது, வேடிக்கை பார்க்க சென்றவர்களை காவல்துறையினர் சுட்டு கொன்றதாகவும், ஸ்டெர்லைட் ஆலையுடன் இணைந்து போராடுபவர்களை பழிவாங்கும் நோக்கோடு காவல்துறை துப்பாக்கிசூடு நடத்தியதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேரின் நினைவாக நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். தூத்துக்குடியில் தாமிர ஆலை இருக்ககூடாது என்பதை சட்ட சபையில் சிறப்பு தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். 

Newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close