திமுக ஆட்சியில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்: ஸ்டாலின்

  Newstm Desk   | Last Modified : 10 Jan, 2019 04:02 pm
investigated-in-jayalalithaa-s-death

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து விசாரணை நடத்தப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தி.மு.க சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.  இதன் முதல் கூட்டம் நேற்று திருவாரூரில் உள்ள புலிவளம் பகுதியில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தஞ்சையில் கூட்டம் நடைபெற்றது. தொடர்ச்சியாக, இன்று திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியம், சீகம்பட்டியில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க தலைவர் ஸ்டாலின், இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம். தி.மு.க ஆள்வதற்கு தொடக்கப்புள்ளி தான் இந்த கூட்டம். மகாத்மா காந்தி கிராமங்களை தான் அதிகம் விரும்பினார். அதன் பேரில் தான் ஊராட்சி கிராமங்களை தேடி மக்களை சந்தித்து வருகின்றோம். எந்த கட்சியும், இது போன்ற மக்களை சென்று சந்தித்து குறைகளை கேட்பதில்லை.

தமிழகத்தில் மொத்தம் 12617 கிராம ஊராட்சிகள் உள்ளது. அனைத்து ஊராட்சிக்கும் செல்ல வேண்டும் என்று விருப்பம் இருந்தாலும் அனைத்து கிராமங்களுக்கும் நான் செல்ல முடியாது என்பதால் தான் தலைமைக்கழகத்தின் மூலம் 400 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு 10 ஊராட்சிகள் வீதம் சென்று கூட்டத்தை நடத்தி வருகின்றனர். 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரை சொல்லி ஆட்சி நடத்தி வருபவர்கள் இனி ஆட்சிக்கு வரப்போவதில்லை என தெரிந்தே கொள்ளையடித்து வருகின்றனர். கலைஞர் கருணாநிதி வயது முதிர்வால் உயிரிழந்தார். ஆனால் ஜெயலலிதா மரணத்தில் தொடர்ந்து மர்மம் நிலவி வருகிறது. திமுக ஆட்சி வந்ததும் ஜெயலலிதா குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.   

Newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close