எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுக பொதுக்கூட்டம்!

  Newstm Desk   | Last Modified : 11 Jan, 2019 05:56 pm
mgr-s-120th-birthday-admk-meeting-will-be-held-for-3-days

எம்.ஜி.ஆரின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் வரும் 18ம் தேதி முதல் மூன்று நாட்கள் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழகமுதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு, வருகிற 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை மூன்று நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன. தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகள், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.

அந்தந்த தொகுதிகளில் பொதுக்கூட்டங்களை சிறப்பான முறையில் நடத்துமாறு சட்டமன்ற தொகுதி உறுப்பினர்களுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close