சென்னை விமான நிலையத்தில் 24 கிலோ தங்கம் பறிமுதல்: தென்கொரிய பெண்கள் இருவர் கைது

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 10:47 am
24-kg-gold-seized-at-chennai-airport

சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட 24 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

ஹாங்காங்கில் இருந்து சென்னை வரும் விமானத்தில், கொரியாவை சேர்ந்த பயணிகள் தங்கம் கடத்தி வருவதாக உளவுத்துறை தகவல் தெரிவித்தது. இதையடுத்து சென்னை விமானநிலையத்தில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில், கொரியாவை சேர்ந்த பெண்கள் இருவர் அதிக எடையுடன் கூடிய உடைமைகளுடன் சந்தேகத்திற்குரிய வகையில் வெளியே சென்று கொண்டிருந்ததை கண்ட அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் ஹாங்காங் விமானத்தில் வந்த பயணிகள் என்பதும் தென்கொரியாவை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து பெண் அதிகாரிகளை கொண்டு அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது ரூ.8 கோடி மதிப்புடைய 24 கிலோ தங்கக்கட்டிகள் ஆடைகளில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்ட தென்கொரியாவைச் சேர்ந்த 2 பெண்களை  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close