போகி பண்டிகை: பிளாஸ்டிக் பொருட்களை எரித்தால் கடும் நடவடிக்கை..

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 12:29 pm
heavy-action-to-burning-plastic-materials

போகி பண்டிகையின் போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எரித்து காற்றை மாசுபடுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

சென்னை கிண்டியில் உள்ள மாசு கட்டுபாட்டு வாரிய அலுவலகத்தில் புகையில்லா போகி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் போகி பண்டிகையின் போது, நெகிழிப் பொருட்களை எரிப்பது எத்தகைய தீங்கை விளைவிக்கும்? அதை தடுக்க என்ன வழி ?  என்பன உள்ளிட்ட பல கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள், பொது நல அமைப்பினர், அரசுத்துறை அல்லாத சேவை நிறுவனத்தினர் என 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஷம்பு கல்லோலிக்கர்," போகி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் யாரும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை எரித்து காற்றையும் சுற்றுச் சூழலையும் மாசுபடுத்தாமல் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதை மீறி செயல்படுவோர் மீது காவல்துறை மூலம் வழக்குப்பதிவு செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,  போகி பண்டிகையையொட்டி சென்னை முழுவதும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 30 ரோந்துக் குழுக்கள் அமைப்பட்டு சோதனை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பிற மாவட்டங்களை பொறுத்தவரை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு சார்பில் என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close