சென்னை: 500 கிலோ குட்கா பறிமுதல்

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 04:17 pm
500-kilograms-gutka-seized

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் மூலம் கடத்தப்பட்ட சுமார் 500 கிலோ குட்கா பொருட்களை ரயில்வே காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ரயில்கள் மூலம் பார்சல்களில் மீன், வாகனங்கள் உள்ளிட்டவை அனுப்பப்படுவது வழக்கம். இந்நிலையில், டெல்லியில் இருந்து இன்று காலை சென்னை எழும்பூர் வந்த திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில், கொண்டு வரப்பட்ட பார்சல்களை ரயில்வே அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, மூட்டைகளில் சுமார் 500 கிலோ குட்கா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை கைப்பற்றிய எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படையினர்,  தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close