எடப்பாடி பழனிசாமி ஒரு ஈயை கூட அடிக்க மாட்டார் - ராஜேந்திர பாலாஜி

  Newstm Desk   | Last Modified : 12 Jan, 2019 08:06 pm

edappadi-palanisamy-won-t-hurt-a-fly-rajendra-balaji

கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் கொலை, கொள்ளை நடந்ததாக ஆவணப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில், முதல்வர் ஒரு ஈயை கூட அடிக்க மாட்டார் என பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு, ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த காவலாளியின் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள், அதைத் தொடர்ந்து முக்கிய குற்றவாளிகள் இறந்தது, என அனைத்துக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், சசிகலாவும் தான் காரணம் என தெஹல்கா செய்தி நிறுவனத்தின் முன்னாள் ஆசிரியர் மாத்தியூ சாமுவேல் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். இந்த ஆவணப்படம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த ஆவணப்படத்தை வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இந்நிலையில் இன்று பேசிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு ஈயை கூட அடிக்க மாட்டார் என கூறியுள்ளார். "முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நல்லாட்சியை கலைக்க சிலர் திட்டமிட்டே இதை செய்துள்ளனர். முதல்வரை எதிர்க்க யாருக்கும் திராணி கிடையாது. திராணி, தெம்பு இல்லாதவர்கள், இதுபோன்ற பொய் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர். ஈயை கூட அடிக்கமாட்டார் எடப்பாடி பழனிசாமி. அவரா கொலை செய்ய போகிறார்?" என்றார். 

newstm.in
 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.