20 தமிழக மீனவர்கள் கைது: இலங்கை கடற்படை அட்டூழியம்

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 01:45 pm
20-tamil-fishermen-arrested-by-sri-lankan-navy

நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 11 மீனவர்களை கைது செய்து, மீனவர்களின் கப்பல்களை சேதப்படுத்தியுள்ளது இலங்கை கடற்படை.

கடந்த இரண்டு வாரங்களாக தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். நேற்று புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த 9 மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிக்க சென்றதாக கூறி கைது செய்யப்பட்டனர். அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. 

முன்னதாக நேற்று இலங்கை கடற்படை கப்பல்கள் மோதியதில் தமிழக மீனவர்களின் சில படகுகள் சேதம் அடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று தங்கச்சிமடத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 11 பேரை கிளிநொச்சிக்கு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். 
கைது செய்யப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் அவர்களை உடனே விடுவிக்க கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close