முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டு திமுகவின் சதி: எம்.எல்.ஏ. செம்மலை

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 03:02 pm
dmk-s-conspiracy-against-the-chief-minister

கொடநாடு கொலை வழக்கில் முதலமைச்சருக்கு எதிரான பொய் குற்றச்சாட்டு அதிமுகவின் நல்லாட்சியை முறியடிக்க நினைக்கும் திமுகவின் திட்டமிட்ட சதி என எம்எல்ஏ செம்மலை குற்றம் சாட்டியுள்ளார்.

சேலம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்.எல்.ஏ செம்மலை, "தெகல்கா பத்திரிக்கை முன்னாள் ஆசிரியர், முதல்வர் பழனிசாமிக்கு எதிராக திட்டமிட்டு சதி செய்து பொய் குற்றச்சாட்டுகளை பரப்பி வருகிறார். ஜெயலலிதா உயிருடன் இருந்த போது கொடா நாடு பங்காவில் ஆவணங்களை திருட  ஓட்டுநர் கனகராஜ் அணுகியதாக கேரளா குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர். 

அப்போது முதலமைச்சராக இல்லாத பழனிசாமி மீது குற்றம்சாட்டுவது எப்படி சரியாக இருக்க முடியும்?  தமிழகத்தில் நல்லாட்சி செய்து வரும் அதிமுக, தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியுள்ளது பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனை முறியடிக்க சதி செய்து திட்டமிட்டு திமுகவினர் அவதூறு பரப்பி வருகின்றனர்.

முதல்வர் குறித்து எந்த அவதூறு பரப்பினாலும் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். பொய் செய்தி பரப்புவோர்களை அதிமுக வேடிக்கை பார்க்காது 
சம்பந்தப்பட்டவர்கள் மீது அவதூறு வழக்கு தொடரப்படும். கொடநாடு கொலை வழக்கை சிபிஐயிடம்  ஒப்படைத்தால் சந்திக்க தயார். இந்த ஆட்சியின் மீது குறை சொல்ல ஒன்றுமில்லை என்பதால், ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு சதி செய்கின்றார்கள். திமுக, டிடிவி தினகரன் என யார் அவதூறு பரப்பினாலும் அதை சந்தித்து பதிலடி கொடுப்போம்" என தெரிவித்தார்.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close