தமிழகத்தின் தென் கடலோர பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 06:08 pm
chennai-weather-report

தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலேயே நிலவும். தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் நிலவும். வெப்பநிலை அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியசில் இருந்து குறைந்தபட்சமாக 20டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்

நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார மலை பகுதிகளில் உறை பனி அடுத்த இரண்டு இரவுகள் தொடரும். கடந்த ஒரு வாரமாக வால்பாறை பகுதியில் நிலவி இருந்த உறை பனி குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில்  மழை எங்கும் பதிவாகவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close