முதலமைச்சர் மீதான குற்றச்சாட்டு : ஆளுநரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 05:00 pm
mk-stalin-meets-the-governor

முதலமைச்சர் பழனிசாமி மீதான குற்றச்சாட்டு தொடர்பாக நாளை ஆளுநரை சந்திக்கவுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், " 2006ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலை நடத்தியது திமுக தான். ஊரக பகுதிகளில் சமத்துவபுரம், உள்ளாட்சி தினம், கான்கீரிட் வீடுகள், 12617 நூலகங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். அதே போல் குடிநீர் தட்டுபாட்டை போக்க ராமநாதபுரம் மாவட்டத்தில் 616 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், வேலூர் கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல குடிநீர் திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். 

ஆனால், கொலைகள், கொள்ளைகள், கமிஷன் என இவை எல்லாம் சொல்ல வேண்டும் என்றால் அது எடப்பாடி ஆட்சி தான்.  போயஸ் கார்டன் இல்லத்திற்கு இணையானது கோடநாடு பங்களா. ஆனால் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த காலத்தில் அங்கு கொலைகள், கொள்ளைகள், தற்கொலைகள் தொடர்ந்து நடந்துள்ளது. இவை எல்லாத்திற்கு காரணம் முதல்வர் தான் என மேத்யூ குற்றம் சாட்டி உள்ளார். ஆனால் இதற்கு பதிலளிக்கும் விதமாக நேற்று பேட்டியளித்த முதல்வர் குற்றசாட்டிற்கு பதில் அளிக்காமல், அரசியல் காரணம் என கூறியுள்ளார்.

மத்திய அரசு இதுகுறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும், அதனை சென்னை உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் வைத்து முதல்வர் மற்றும் அமைச்சர்களை விசாரிக்க வேண்டும். முதல்வர் பதவி விலக வேண்டும். 

இந்த குற்றச்சாட்டு குறித்து ஆளுநர் மற்றும் குடியரசு தலைவரின் கவனத்துக்கு எடுத்து செல்ல உள்ளோம். முதற்கட்டமாக ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். நேரம் ஒதுக்கினால் இதுபற்றி  ஆளுநரிடம் கூற உள்ளோம். உரிய விசாரணை நடத்தாவிட்டால் திமுக சார்பில் நீதிமன்றத்தை நாடுவோம்" என தெரிவித்தார். 

newstm.in

 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close