புதுச்சேரியிலும் பிளாஸ்டிக் தடை - மார்ச் 1 முதல் அமல்

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 05:33 pm
plastic-to-be-banned-in-puducherry-from-march-1

தமிழகத்தைப் போன்று புதுச்சேரி மாநிலத்திலும் ஒருமுறைப் பயன்பாட்டிலான பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளது. அந்தத் தடை மார்ச் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

பிளாஸ்டிக் கப், கேரி பை, பார்சல் கவல் உள்பட 14 வகையான பொருள்களுக்கு தமிழக அரசு கடந்த 1ம் தேதி முதல் தடை விதித்தது. இதையடுத்து, ஆங்காங்கே பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களும் கொஞ்சம், கொஞ்சமாக துணிப் பைகளை எடுத்துச் செல்ல பழகி வருகின்றனர். அதே சமயம், பால், மருந்து போன்ற பொருள்களுக்கு மட்டும் பிளாஸ்டிக்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. மூத்த அதிகாரிகளும் அதில் கலந்து கொண்டனர். அப்போது 14 வகையான பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிப்பது என முடிவு செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, பிளாஸ்டிக் தடை மார்ச் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாகத் தெரிவித்தார். மகாராஷ்டிரம், ஒடிஸா போன்ற நாட்டின் பிற மாநிலங்களிலும் பிளாஸ்டிக் தடை ஏற்கனவே அமல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close