கொடநாடு வழக்கில் முதல்வரை குற்றம்சாட்டிய சயான், மனோஜ் கைது!

  Newstm Desk   | Last Modified : 13 Jan, 2019 07:19 pm

kodanad-case-sayan-arrested

கொடநாடு காவலாளி கொலை மற்றும் கொள்ளை வழக்கில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரிலேயே கொள்ளையடித்ததாக கூறிய சயான் மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் தமிழக போலீசாரால் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொடநாடு எஸ்டேட் கொள்ளை மற்றும் காவலாளி கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட சயான் மற்றும் மனோஜ் ஆகிய இருவரும் ஜாமீனில் வெளியில் உள்ளனர். சமீபத்தில் தெஹல்கா நிறுவன முன்னாள் ஆசிரியர் மாத்தியூ சாமுவேல் எடுத்த ஆவணப்படத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரிலேயே கொள்ளையில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த ஆவணப்படம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக போலீசார் தனிப்படை அமைத்து டெல்லி சென்றனர். அங்கு, சயான் மற்றும் மனோஜை கைது செய்துள்ளனர்.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.