ஆளுநரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்

  Newstm Desk   | Last Modified : 14 Jan, 2019 08:41 am
mk-stalin-meets-the-governor

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தமிழ ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று சந்திக்கிறார். 

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக, பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். இந்த குற்றச்சாட்டுக்கு முதலமைச்சர் பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனிடையே, மேத்யூவின் ஆவணப்படம் குறித்து விசாரணை நடத்த சென்னை குற்றப்பிரிவு துணை ஆணையர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படை டெல்லி சென்று வழக்கில் தொடர்புடைய சயான், மனோஜ் ஆகியோரை நேற்று கைது செய்துள்ளது. 

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5.30 மணிக்கு ஆளுநரை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பின்போது, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதலமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தவுள்ளதாக கூறப்படுகிறது. 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close