பொங்கல் விழா: கன்னியாகுமரி படகு சேவையின் நேரம் நீட்டிப்பு

  சாரா   | Last Modified : 15 Jan, 2020 05:54 pm
extension-of-kanyakumari-boat-service

பொங்கல் பண்டிகையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா படகு சேவையின் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

கன்னியாகுமரியில், விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவை மிக முக்கிய சுற்றுலா இடமாக கருதப்படுகிறது. கடலினுள் இவைகள் அமைக்கப்பட்டுள்ளதால் படகு மூலமே சுற்றுலாப் பயணிகள் இவ்விடங்களுக்கு சென்று வருகின்றனர். இதற்காக தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரைக்கும் சுற்றுலா படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருவதையொட்டி இன்று முதல் வரும் 17ம் தேதி வரை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை படகு சேவை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close